Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலைவாய்ப்பை அள்ளிக் குவித்துள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் - சத்தியபாமா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

ஆகஸ்டு 01, 2022 05:50

சத்தியபாமா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு நிறுவனர் வேந்தர் டாக்டர் ஜேப்பியார் அவர்களால் தொடங்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தரவரிசையில் முதன்மையான இடங்களை பிடித்து பல அங்கீகாரங்களை பெற்று பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு பிரிவு கல்வி மற்றும் தொழில் உலகின் இடையே ஒரு பாலமாக விளங்குகிறது. இப்பிரிவு நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்கு ஏற்ற தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறன்களை ஊக்குவித்து வளர்த்து அதற்கான வகுப்புகளை அளித்து தயார் செய்து நிறுவனங்களின் தேவையை சிறப்பாக பூர்த்தி செய்கிறது.

மாணவர்கள் முதல் ஆண்டிலிருந்து நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரம் பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுவதால் அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற தகுதிகளை மற்றும் திறன்களை வளர்த்துக் கொண்டு கடைசி வருடம் வேலை வாய்ப்பை சுலபமாக பெற்று விடுகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் கார்ப்பரேட் உலகின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்கள் சிறப்பாக தயார் செய்யப்படுகிறார்கள்.

இதுவரை இப்பல்கலைக்கழகத்தில் இருந்து 91.20 சதவீதம் மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில் வளாக வேலை வாய்ப்பை 2097 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வருடம் 452 நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் இருந்து, அதாவது ஐடி, ப்ராடக்ட் டெவலப்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ், கன்சல்டிங், பைனான்ஸ், ஆப்பரேஷன் மற்றும் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவுகளில் இருந்து வந்து, மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவற்றுள் 108 நிறுவனங்கள் ட்ரீம் அண்ட் சூப்பர் ட்ரீம் பிரிவில் உள்ள நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் 550 வேலை வாய்ப்புகள் இந்த நிறுவனங்களில் இருந்து கிடைத்துள்ளது. மாணவர்கள் அதிக ஊதியம் கிடைக்கப்பெற்றதை நினைத்து பெரிதும் மகிழ்ந்துள்ளனர். 2022ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு சிறப்புகள்: 1. ரூ 31 லட்சம் ஆண்டுக்கு என்ற அதிகபட்ச ஊதியம் கிடைத்துள்ளது. 2. சராசரியான ஆண்டு ஊதியம் ரூபாய் 4.95 லட்சம்.

3. 92.25% வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 2020 21 ஆம் ஆண்டு உலக அளவில் முன்னணி வகிக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்து வளாக நேர்முகத் தேர்வை மாணவர்களுக்கு நடத்தி பெரிதளவு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது எங்கள் கல்லூரிக்கு வந்த முக்கிய நிறுவனங்கள் பின்வருமாறு: அமேசான், அசென்சர், அட்டோஸ், ஆடோமொட்டிவ் ரோபாடிக்ஸ், பாங்க் ஆப் அமெரிக்கா, பிஎன்பி பரிபாஸ், போன்ஃபிக்லியோலி, பிஎன்ஒய் மெல்லான், காக்னிசெண்ட், கேப்ஜெமினி, சிஸ்கோ, சேரியம், டெலோய்ட்டே, எடுபொலிஸ் டெக்னாலஜிஸ், ஃப்ஐஎஸ் க்லோபல், காட்ரெஜ், எச்செஎல், ஹுண்டாய் மோட்டார், இண்டெல்க்ட், இன்போசிஸ், இன்ங்கிரம் மைக்ரோ, ஐபிஎம், முசிக்மா, நௌக்ரி, சீமென்ஸ், ஆரக்கிள், ஓப்போ, க்யுக்ஸ்ஸி, ரேவாச்ஸ்ர், பி ட்பிள்யு சி, பப்ளிக்ஸ், சேப்பியண்ட், சேயிண்ட் கோபியன், சிலிக்கான் லேப்ஸ், டாடா கம்யுனிகேஷன்ஸ், டி சி எஸ், டாடா எல்க்ஸ்ஸி, வேரிஜான், வாலியோ, விஸ்ட்டியான், வால்வார்ட் லேப், விப்ரோ கார் டெக்னாலஜிஸ், ஹக்சாவேர், ஹிட்டாச்சி, எம்பசிஸ், சிஃபொ டெக், சோஹா முதலியன... இந்த வருட மாணவர்களின் வேலை வாய்ப்பு பற்றிய செய்தி அடுத்துள்ள மாணவர்களுக்கு பெரிய உந்துதல் ஆகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அடுத்து வரும் வருடங்களில் சத்தியபாமா பல்கலைக்கழகம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தங்கள் மாணவர்களை முன்னிறுத்த பாடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாமா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு நிறுவனர் வேந்தர் டாக்டர் ஜேப்பியார் அவர்களால் தொடங்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்