Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - அச்சிந்தா ஷூலி

ஆகஸ்டு 01, 2022 06:13

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான பளு தூக்குதலின் (73 கிலோ) இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி பங்கேற்றார்.

இப்போட்டியில் அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். 

அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 170 கிலோவும் தூக்கினார். இவர் வென்ற பதக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில் பதக்கம் வென்ற அச்சிந்தா ஷூலி கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல போராட்டங்களை கடந்து இந்த பதக்கத்தை வென்றுள்ளேன்.

இந்த பதக்கத்தை நான் எனது சகோதரருக்கும் , எனது பயிற்சியாளருக்கும் அர்ப்பணிக்கிறேன். அடுத்ததாக நான் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்