Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம்

ஆகஸ்டு 03, 2022 01:47

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதுதொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரையான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பான மழையளவு 125 மி.மீ ஆகும். 

இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்து வருகிறது. இந்த ஆண்டும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. 

 கேரளாவில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகத் தின் வளிமண்டல பகுதியின் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது. 

இந்த பகுதி அடுத்து வரும் நாட்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கன மழையும், 4 இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்