Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிப்பு: 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ஆகஸ்டு 03, 2022 01:52

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மீனவர்கள் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். முட்டம், நீரோடி, ராமன்துறை வள்ளவிளை, பூத்துறை பகுதிகளில் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. 

ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. இதையும் படியுங்கள்: தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்- அமைச்சர் நாசர் தகவல் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புகள் வரை ராட்சத அலைகள் வந்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடற்கரை ஓரத்தில் உள்ள கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் மீது கடல் அலைகள் வேகமாக மோதி செல்கின்றன. குளச்சல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

கடல் சீற்றத்தால் 3 வள்ளங்கள் சேதம் அடைந்துள்ளதாக கடலோர காவல்படை போலீசில் மீனவர்கள் புகார் செய்து உள்ளனர். முட்டம் பகுதியில் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகும், மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போதும் துறைமுகத்தின் கற்கள் மீது மோதி ஒரு படகும், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சூறைக்காற்றில் ஒரு படகில் இருந்த இன்ஜின் சேதமடைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக குளச்சல் கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளைத் தோப்பு, கோவளம், கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம் பகுதியிலும் கடல் சீற்ற மாகவே காணப்பட்டது. இன்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
 

தலைப்புச்செய்திகள்