Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல்கவரப்பட்டு  பகுதியில் இருந்த வேகத்தடை அகற்றம்

ஆகஸ்டு 04, 2022 02:00

கடலூர்: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி வாங்கும் இடமாக மாறியது. இதனால்அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க அங்கு சாலையின் நடுவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். 

இதனை தொடர்ந்து அங்கு சாலை நடுவே சிமெண்ட் கான்கிரீட் மூலம் பெரிய அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. உயிர் பலி தடுக்கஅமைக்கப்பட்டு இருந்தஇந்தவேகத்தடைஉயிர்பலிவாங்கும் வேக தடையாகமாறியது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், கோரி வந்தனர். இந்த வேகத்தடையை உடனடியாக அகற்றபடவில்லை என்றால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறை அதிகாரி அதிரடியாக இந்த வேகத்தடையை முழுமையாக அகற்றினர் இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்