Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடமதுரை அருகே ஓ.எல்.எக்ஸ். மூலம் பணம்  மோசடி போலீஸ் நிலையத்தில் தம்பதி புகார்

ஆகஸ்டு 04, 2022 02:01

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25). இவரது மனைவி அழகேஸ்வரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ண மூர்த்தி கம்பிளியம்பட்டியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

 தனது சொந்த தேவை க்காகவும், வாடகைக்கு விடுவதற்காகவும் கார் வாங்குவதற்காக இணையதளங்களில் தேடிப்பார்த்தார். அப்போது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தான் ஒரு ராணுவ வீரர் என்றும் தன்னிடம் உள்ள காரை விற்க விரும்புவதாகவும் கூறினார். அவரது ஆதார் எண் மற்றும் ராணுவ வீரர் உடை அணிந்த புகை ப்படத்தையும் கிருஷ்ண மூர்த்தியின் செல்போ னுக்கு அனுப்பியு ள்ளார். இதனையடுத்து பல தவணைகளாக ரூ.42,000 பணத்தை சுதர்சனுக்கு கிருஷ்ணமூர்த்தி அனுப்பி யுள்ளார்.

 கார் வந்தவுடன் முழு தொகையையும் தந்து விடுவதாக உறுதியளித்து ள்ளார். மேலும் ரூ.5,000 மட்டும் கட்டினால் கார் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும் என சுதர்சன் கூறியுள்ளார். ஆனால் அவர் பணம் அனுப்ப தாமதம் ஆனதால் காரை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார். மேலும் தனது செல்போன் எண்ணையும் ஸ்விட் ஆப் செய்து விட்டு சுதர்சன் சென்று விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற சந்தேக த்தில் கிருஷ்ண மூர்த்தி வடமதுரை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி புகைப்படத்தை ராணுவ வீரர் போல் சித்தரித்து அனுப்பிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்