Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹிமாச்சலப் பிரதேசம்: தொடர் மழையால், ஏற்பட்ட நிலச்சரிவு.. பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் தஞ்சம்..!

ஆகஸ்டு 08, 2022 07:07

நிலச்சரிவின் போது ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து நின்ற காட்சிகள் வைரல்..!

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீர் நிலச்சரிவு: இமாச்சல பிரதேச மாநிலத்தில், மேகவெடிப்பு காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணாக கின்னூர் அடுத்த பாவ்நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலையோரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சாலையில் சரிந்து விழுந்த பாறைகளையும், மண் குவியல்களையும் அகற்றியதை அடுத்து போக்குவரத்து சீரானது. நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளில் அதனை பதிவு செய்தனர்.

பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள்: இதேபோல், கந்தவா உள்ளிட்ட பகுதிகளில் எற்பட்ட வெள்ளப் பெருக்கால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சீறிப்பாய்ந்த தண்ணீர் சாலைகள், பாலங்களை அறித்துச் சென்றதால் பெரும்பாலான இடங்களில்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்த்தால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனால், உடமைகளுடன் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். 

தலைப்புச்செய்திகள்