Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்சார திருத்த மசோதாவும் கண்டனங்களும்....!!!!

ஆகஸ்டு 08, 2022 07:08

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதா மின்விநியோக துறையில் தீவிர மாற்றங்களை முன்மொழியும் என மத்திய மின்துறை அமைச்சர் கூறியிருந்தார். மேலும் இது பசுமை ஆற்றலின் பங்கை அதிகரிக்கும் எனவும், தொழில்நுட்பங்களின் செயல்திறனை மேம்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார்.

மின்சார திருத்த மசோதா தாக்கல்:  எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்திருத்த   மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங்.  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கள்: மின் கட்டணங்களை மாற்றியமைக்கும் அதிகாரம் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு  வழங்கப்படும்.  மின் விநியோகத்தின் உரிமம் தனியாருக்கும் வழங்கப்படும்.  மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  
உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் எனவும் திருத்த மசோதா கூறியுள்ளது.

கண்டனங்கள்: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.  மேலும் இது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையையே மாற்றுவதாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மின்சாரம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் உள்ளது எனவும் அதில் முடிவெடுக்கும் உரிமை மாநிலங்களுக்கும் உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.  மின்சார திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் முன் மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப எதிகட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ்நாடு கண்டனம்: நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் தமிழ்நாடு எம்.பி. டி. ஆர். பாலு கூறியுள்ளார்.  மசோதாவால் தமிழ்நாட்டில் அமலில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பாதிக்கப்படும் எனவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.  சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் இலவச மின்சாரத்தி நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும் மக்களவை எம்.பி. பாலு கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்