Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளுநர் சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்

ஆகஸ்டு 13, 2022 06:57

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது- சீமான்

தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிஅரசியல் பேசியதில் தவறில்லை என்றும் யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மாலை முரசு நிறுவனர் பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே?. அப்பொழுது அது சார்ந்து நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களும் தானே அவர் சந்திப்பார்.

அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்கள். அப்பொழுதுதான் நாடு உருப்படும்.  நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி, மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. மேலும் ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை’ என குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டத்தை திணித்தது யார்?

நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்றால் இப்பொழுது எப்படி நிர்வாகத்திற்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டத்திற்கு பிறகு தானே நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் விமர்சித்தார்.

சுதந்திர தினத்தன்று எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று கூறினீர்களே வீட்டை காட்டுங்கள் என கூறிய சீமான், ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுபற்று வந்துவிடுமா எனவும் வினா எழுப்பினர்.
 

தலைப்புச்செய்திகள்