Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஏர்போர்டில் பெண்களை குறிவைத்து மோசடி - இலங்கையை சேர்ந்த இருவர் கைது

ஆகஸ்டு 15, 2022 01:21

சென்னை விமான  நிலையத்தில் போலி சுங்கத்துறை அதிகாரிகளான இலங்கை ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இலங்கையில் இருந்து விமான மூலம் வரும் பெண்களை குறி வைத்து நாங்கள் சுங்கத்துறை அதிகாரி எனக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (வயது47) வசீகா (வயது-50)ஆகியோர் கடந்த 8ந்தேதி அதிகாலை கொழும்பில் இருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர்.  இவர்கள் சுங்கத்துறை மற்றும் குடியுரிமை சோதனை முடித்து விட்டு வெளியில் வந்து மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.  அப்போது விமான நிலைய கார் பார்க்கிங் அருகே நடந்து சென்றபோது அந்த இரண்டு பெண்களை பேர் நிறுத்தி, நாங்கள் சுங்கத்துறை மற்றும்  விஜிலென்ஸ் ஆபீசா்கள் என்று கூறி நீங்கள் அதிக நகைகளை அணிந்து உள்ளீா்கள். நகைகளுக்கு டியூட்டி கட்டாமல் வெளியில் எடுத்து வந்து விட்டீர்கள். மீண்டும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு வந்து டியூட்டி கட்ட வேண்டும் என மிரட்டும் தோனியில் கூறியுள்ளார்.

அதோடு நதிஷா அணிந்திருந்த தங்க வளையல்களை கழற்றி வாங்கிக் கொண்டனர். இரண்டு பேர்களின் பாஸ்போர்டையும் வாங்கி பரிசோதித்து விட்டு திருப்பி கொடுத்தனா். சுங்கத்துறை அலுவலகத்திற்கு வந்து டியூட்டி கட்டிவிட்டு நகைகளை வாங்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றனா். சுங்கத்துறை அதிகாரிகள் என்று கருதிய நதிஷா டியூட்டி கட்ட பணம் எடுத்து கொண்டு விமான நிலைய சுங்கத்துறை  அலுவலகம் சென்றார். ஆனால் அதிகாரிகள் நாங்கள் உங்களிடம் இருந்து நகைகளை எதுவும் வாங்கவில்லை என்று கூறினா். இப்போது வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி இரண்டு பேர் எங்களிடம் நகைகளை வாங்கினார் என தெரிவித்துள்ளார்.


இதைமறுத்த  சுங்கத்துறை அதிகாரிகள் உங்களை யாரோ ஏமாற்றி உள்ளனா் என்று கூறியதும் உடனே நதிஷா சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் விமான நிலைய காவல் உதவி கமிஷனர் புகழ்வேந்தன், உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நதிஷாவிடம் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து நகைகளை வாங்கி கொண்டு செல்லும் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை தொடங்கினர்.

இதையடுத்து போலீசாா் இரண்டு மா்ம ஆசாமிகளை தேடி வந்த நிலையில் விமான நிலைய போலீசார் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கண்காணிப்பு கேமிராவில்  இரண்டு பேர் செல்வது போல் கண்டனர். அவர்களை பிடிக்க முயன்ற போது இரண்டு பேரும் தப்பி ஒடினார். போலீசார் விரட்டி சென்றதில் ஒருவர் கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொருவர் தப்பி ஒடிவிட்டார். உடனே போலீசார் அடிப்பட்டு விழுந்த வாலிபரை பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்