Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

Gold Rate: அதிரடியாக  தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் குறைந்தது

ஆகஸ்டு 16, 2022 01:57

Gold and Silver Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 வரை குறைந்து விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

வரத்தின் முதல் நாளும் 75வது சுதந்திர தினமுமான நேற்று தங்கத்தின் விலையில் எவ்வித ஏற்றமும் இறக்கமும் இல்லாமல்ரூ.39ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து  நீடித்தது. வெள்ளி கிலோ ரூ.64,800க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்று சரிவை கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  கிராம் ரூ.4,876 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கும் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.63.80க்கும் , கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்