Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி

ஆகஸ்டு 26, 2022 10:05

புதுடில்லி : வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசியதாக, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு பதிவு செய்யப்படாததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தில் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன், 2007 ஜனவரியில் கோரக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் ஆதித்யநாத் மீது வழக்கு பதிவு செய்ய, 2017ல் உ.பி., அரசு மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கை முடித்து வைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பர்வேஸ் பர்வாஸ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆதித்யநாத் மீது வழக்கு பதிவு செய்யப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 'இப்போதைய சூழலில், வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கக்கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்