Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு

ஆகஸ்டு 27, 2022 01:36

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ( ஆக.,27) தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறு நாள் (ஆக., 29) தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது .மன்னார் வளைகுடா, தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்