Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிப்பு!

செப்டம்பர் 17, 2022 12:52

பீஜிங், குரங்கு அம்மை சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும், உலக சுகாதார அவசரநிலையாகவும் கருத்திற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சோங்கிங் நகரம் வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அந்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்படு இருந்தனர். அப்போது அவருக்கு உடலில் தோல் அரிப்பு போன்ற பாதிப்பு உண்டானது. பின் அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. சோங்கிங் நகருக்கு வந்தவுடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதால் வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்