Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஜித் மிரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சீனா தடை!

செப்டம்பர் 17, 2022 12:56

நியூயார்க், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிரை தடை செய்யப்பட்டோர் கருப்பு பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் இந்தியாவும் முன்மொழிந்தன.ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்வைத்த தீர்மானத்தை சீனா தடுத்துள்ளது.

இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரும், 2008 மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என கருதப்படும் சஜித் மிர். அவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக வைத்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால், பயங்கரவாத நிதியுதவி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானிய அதிகாரிகள் மிர் இறந்துவிட்டதாகக் கூறினர், ஆனால் மேற்கத்திய நாடுகள் நம்பவில்லை மற்றும் அவரது மரணத்திற்கான ஆதாரத்தைக் கோரின. அந்த நபரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடைகள் குழுவின் கீழ் தடுப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அதன்மூலம், சஜித் மிர் ஒரு உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அவரது சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்ற இந்த முன்மொழிவு அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு இந்தியாவால் வழிமொழியப்பட்டது.

ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்மொழிவு நேற்று சீனாவால் நிராகரிக்கப்பட்டது. கடந்த மாதம் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவருமான அப்துல் ரவூப் அசாரை தடை செயப்பட்டோர் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்மொழிவு சீனாவால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்