Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும்- சீமான்

செப்டம்பர் 19, 2022 03:21

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும்.

அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே.

உக்ரைன் போரினால் மருத்துவம் படித்த மாணவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர். இந்தியா வந்தவர்கள் இந்தியாவில் படிப்பு தொடர் முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்தியாவில் படிக்காமல் இருப்பதே நல்லது. வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனம் உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள்.

இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும் அவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும். ஜி-ஸ்கொயர் நிறுவன சொத்துகள் குறித்த வில்லங்கங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெறமுடியாத நிலையை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, மதங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. எது தங்கள் சமயக் கோட்பாடு என் பதில் தான் வேறுபாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்