Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களின் பணத்தை மீட்டுத்தரக்கோரி ஜி.கே.வாசன்,  24-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 20, 2022 01:16

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் தங்களின் எதிர்காலம் கருதி சிறுகச், சிறுகச் சேமித்த பணத்தை ஆருத்ரா ஐ.எப்.எஸ்., ஜி.எ.டி. போன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் பேர்கள், ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய ஆருத்ரா, ஐ.எப்.எஸ்., ஜி.எ.டி. போன்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி காஞ்சிபுரம், காந்தி ரோடு, பெரியார் தூண் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் மலையூர் ஏ. புருஷோத்தம்மனின் தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி கண்டன உரையாற்றுகிறார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களும், பொதுமக்களும் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்