Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

செப்டம்பர் 20, 2022 01:19

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீதம் பேர் மாணவிகள். 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 4,500க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.

சட்ட விதி மட்டுமின்றி அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் காபாற்றும் வகையில் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும்.

ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காக தங்கள் வாதத் திறமையை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும். சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்