Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்த புல்லட் மீது நம்மவர்களுக்கு ஏன்தான் இந்த மோகமோ தெரியல....

செப்டம்பர் 23, 2022 03:46

 தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராச பாகவதர் உச்ச நிலையில் இருந்தபோது, ஒரு பட்டு வேட்டி மற்றும் பட்டு அங்க வஸ்திரம் (நேரியல்) போட்டுக்கொண்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அதாவது,   அன்றைய மெரீனா கடற்கரையில் காற்றாக பறந்து செல்வார் என்று படித்து இருக்கிறேன்.

படத்தில் இருக்கும் அன்பு நண்பர் திசையன் விளை நகரை சென்னைக்கு இணையாக மாற்றி அமைக்கும் விதமாக நில வணிக தொழிலில் கொடி கட்டி பறப்பவர். பல நகர்களை திசை மாநகரைச்சுற்றி வளர்த்து தானும் வளர்ந்து அந்த பகுதி ஏழை நடுத்தர மக்களை சொந்த வீடு வாசல் என்று வாழச்செய்பவர்.
பல கார்கள் வைத்து இருந்தாலும், காற்றோட்டமாக திசை மாநகரின் வெளிவட்டச்சாலையில் புல்லட்டை ஓட்டிச்செல்வதில் அலாதி பிரியம் உள்ளவர். அவர் முகத்தைப்பாருங்கள் புல்லட்டில் செல்வதில் எத்தனை பூரிப்பு? 

  இதே பாேன்று தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேசு இவர் சிறுவயதில் இருந்தே புல்லட் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர். கையில் காசு கிடைத்த காலத்தில் புல்லட் ஒன்று வாங்கினா் அது குடம் குடமாக பெட்ரோல் குடித்தது. என்றாலும் பட்டாபிராமில் இருந்து  அந்த புல்லட்டில் தான் சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வோம். தமிழ் நாடு நாடார் சங்க வளர்ச்சியில் அந்த புல்லட்டுக்கு பெரும் பங்கு உண்டு. பட்டாபிராம்  முதல் வண்டலூர் வரை பைபாசில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் போது எதிர்க்காற்றை கிழித்துக்கொண்டு போகும் போது, அது அலாதி இன்பம் தான். 

அதே போன்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக 1995 களில் இருந்த பாண்டியராஜன் ஒரு புல்லட் வைத்து இருந்தார். அதில் காதை கிழிக்கும் ஒலிப்பான் பொருத்தி இருப்பார். மாலையில் பஜாரில் ஒலி எழுப்பி அவர் வரும் போது, அவர் மீசைக்கும் தோரணைக்கும் எடுப்பாக இருக்கும். நடை பாதையில் அனுமதி  இல்லாமல் கடை பாேடுபவர்கள் பயந்து ஓடுவார்கள். 

 புல்லட் ஒரு மிடுக்குதான்.

- வரண்டிய வேலன்


 

தலைப்புச்செய்திகள்