Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அக்டோபர் 01, 2022 05:39

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் உட்பட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
க்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ.  தற்போது வரை 656.90 மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 2022 ஆம் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 240.02 மி.மீ. அதிகமாக மழை அளவு பெறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை நெல் 764 எக்டர், சிறுதானியங்கள் 31,423 எக்டர், பயறு வகைகள் 5,364 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 27,274 எக்டர், பருத்தி 2,341 எக்டர் மற்றும் கரும்பு 5,731 எக்டர் என மொத்தம் 72,897 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.   தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 337 எக்டர், கத்திரி 317 எக்டர், வெண்டை 216 எக்டர், மிளகாய் 139 எக்டர், மரவள்ளி 1,483 எக்டர், வெங்காயம் 1,568 எக்டர், மஞ்சள் 1,635  எக்டர் மற்றும் வாழை 1,981 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 1421 மெ.டன், டிஏபி 1288 மெ.டன், முரேட் ஆப் பொட்டாஷ்1003 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 421 மெ.டன், காம்ப்ளக்ஸ்3399 மெ.டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் பிற வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு சிறப்புப் பருவத்தில் நெல்-II, சிறிய வெங்காயம்-II மற்றும் இரபிப் பருவத்தில் 01.10.2022 ஆம் தேதிக்குப் பிறகு விதைப்பு செய்யக் கூடிய வேளாண்மைப் பயிர்களான சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கும், தோட்டக்கலைப் பயிர்களான வாழை, தக்காளி மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். விரைவில் மாண்புமிகு. சுற்றுலாத் துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக “கால்நடை மருத்துவர்” செயலி விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் அவசியம் மற்றும் பயன்கள் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்