Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடி தாக்கி கோவிலில் உள்ள சாமி சிலைகள் சேதம் அடைந்தன

அக்டோபர் 11, 2022 02:14

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட புனவாசிப்பட்டி அருகே வீரணம்பட்டியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை லேசான மழை பெய்ய தொடங்கியது, தொடர்ந்து இன்று அதிகாலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த விநாயகர், நந்தி சிலைகள் இடிந்து கீழே விழுந்தது. 

கோவில் வராண்டாவில் படுத்து இருந்த பள்ளி மாணவன் பிரசாத், கல்லூரி மாணவன் கவி மற்றும் ஐயப்பன் உட்பட 3 பேர் மீது நெருப்புகள் பட்டு காயம் ஏற்பட்டது. மேலும் கோவிலில் இருந்த அரச மரத்தில் நெருப்பு பட்டு அதிலிருந்த 30க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்