Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓசூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து

அக்டோபர் 12, 2022 10:41

கிருஷ்ணகிரி;  ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பேடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் வேன் ஒன்று சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது சுண்டகிரி அருகே பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காயமடைந்தவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சூளகிரியில் அவசர சிகிச்சை பிரிவில் 11 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து சூளகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறனர் பள்ளி குழந்தைகள் வந்த வேன் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

தலைப்புச்செய்திகள்