Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 9 பேர் கைது

அக்டோபர் 13, 2022 12:05

கரூர்;

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பானம் விற்றதாக, 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, எஸ்.ஐ, அழகுராம், சட்டம் -ஒழுங்கு எஸ்.ஐ, உதயகுமார் உள்ளிட்ட போலீசார், கரூர் டவுன், வாங்கல், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமசாமி (47); சிதம்பரம் (39); செந்தில்குமார் (47); ராஜசேகர் (31); தமிழரசன் (22); ரமேஷ் (47); அஜித்குமார் (27); ரவி (56); ஜோதிமுருகன் (46); ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்