Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

அக்டோபர் 13, 2022 12:51

ஹிமாச்சல பிரதேசம்;

உனே மாவட்டத்தில் உள்ள பெகுபெலா ஹெலிபேடுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சிறப்பாக வரவேற்றார்.

இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டின் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உனா ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வெறும் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். 

ரெயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும். புதிய வந்தே பாரத் ரெயில் முந்தைய ரெயில்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு மேம்பட்ட பதிப்பாகும். இது மிகவும் இலகுவானது மற்றும் குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தேர்தலை சந்திக்கும் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உனா மற்றும் சம்பா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்