Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள கடற்கரையில் கரை ஒதுங்கிய மீன்களை ஆரவாரத்துடன் அள்ளி சென்ற மக்கள்

அக்டோபர் 14, 2022 12:30

கேரளா;
 
காலநிலை மாறுபாடு காரணமாக கடலில் மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் கேரள மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

கோழிக்கோடு அருகே வடகரா கடற்கரை பகுதிகளில் திடீரென குவியல் குவியலாக சாளை மீன்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கின. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும், ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் மீன்களை கூடையில் அள்ளி சென்றனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.   

மீன்கள் கரை ஒதுங்கியதால் நாட்டு படகு மீனவர்களும் மீன்களை வலை போட்டு பிடித்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்