Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிற்குள் ஊடுருவிய பிஎஃப்.7 ஒமைக்ரான் வைரஸ்

அக்டோபர் 18, 2022 07:17

புதுடெல்லி, 

பரவும் வேகம் அதிகம் கொண்ட புதிய வகை ஒமைக்ரானின் உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வரும் பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலில், குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வுக் கூடத்தல் முதல் பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பிஏ.5 வகையின் துணைப்பிரிவான பிஎஃப்7 வகை வைரஸ்தான் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இதையடுத்து, நாட்டில் பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அது மிகவும் வேகமாகப் பரவும் திறன் கொண்டதா என்றும், அதனால் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா என்பதும் தீவிரமாகக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்