Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இருந்து நாளை கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம்

அக்டோபர் 19, 2022 01:53

சென்னை, 

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக 21,22 மற்றும் 23 ஆகிய 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பேருந்துகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால் ஏழை மக்கள் அதில் பயணம் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். 

அரசு பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். அதனால் நாளை (20-ந் தேதி) பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து நாளை வெளியூர் செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட 2100 கூடுதலாக 250 பேருந்துகளுடன் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டது. அதனால் நாளையும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து நாளை வெளியூர் செல்ல 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளை கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். நாளை மறுநாள் முதல் 6 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்