Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எந்த நிறுத்தத்தில், எந்தெந்த பேருந்து?

அக்டோபர் 20, 2022 11:50

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மொத்தம் 5 இடங்களிலிருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகளும், 

கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், 

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செஞ்சி மார்க்கம் செல்லும் பேருந்துகள்,

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடிலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகளும், 

கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்ய நடைமுறையில் உள்ள இணையதளமான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்