Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் நகை பறித்த வாலிபர் கைது

அக்டோபர் 20, 2022 03:10

புதுச்சேரி: பஸ்சுக்காக காத்திருந்த போது பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். புதுவை தேங்காய்திட்டு புது நகர் மருதம் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது தாய் அஞ்சலை. இவர் பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்திவருகிறார். 

சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கடலூர் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அஞ்சலை அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. 

போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். இந்த நகை பறிப்பில் சென்னை சோளி ங்கநல்லூரை சேர்ந்த அபி என்ற அபி மன்யூ (வயது 27). என்பவர் தலைமறைவாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சென்னை சோளிங்கநல்லூர் சென்று அபியை கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.


 

தலைப்புச்செய்திகள்