Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையினால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

அக்டோபர் 21, 2022 02:45

மெலட்டூர்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா பருவத்தில் நடவு செய்திருந்த பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுருந்த சம்பா பயிர்கள் தொடர்மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி கடந்து சில தினங்களாக நாற்றுகள் மூழ்கிய நிலையில் உள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது. 

ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். 

மழையால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு அரசு உடனடியாக பயிர் நிவாரண தொகை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்