Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

அக்டோபர் 22, 2022 02:41

சென்னை, தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர். தாமதமாக விற்பனை தொடங்கினாலும் தற்போது இனிப்பு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல் பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க ஆரம்பித்துள்ளனர்.  

இதனால் பட்டாசு வியாபாரிகளும் சந்தோஷம் அடைந்துள்ளனர். இன்று பல இடங்களில் மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பெருமளவு பாதிப்படையவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. போலீஸ் உதவி மையம் மூலம் 24 மணி நேரமும் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். 

பல இடங்களில் நெரிசல் அதிகமாக காணப்படுவதால், திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்