Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளி பண்டிகை: பன்மடங்காக உயர்ந்த விமான கட்டணம்...அதிர்ச்சியில் பயணிகள்!

அக்டோபர் 22, 2022 04:43

கட்டணம் உயர்வு : பொதுவாகவே, வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தங்கி வேலை செய்யும் மக்கள் பண்டிகை தினம் என்றாலே சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வது வழக்கம். அப்படி ஒரே நேரத்தில் மக்கள் படையெடுக்கும் போது, அதை பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்தி பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்குகளாக உயர்த்தி அளவுக்கு அதிகமாக வசூலித்து வருகின்றனர். இதன் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது விமானத்திலேயே பயணம் செய்யலாம் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிப்பட்டது. 

விமான டிக்கெட் கட்டணம் உயர்வு : ஆனால், தற்போது தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏனென்றால், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நிரம்பி வழிவதால், விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.  

அதிர்ச்சியில் பயணிகள் : குறிப்பாக சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 6 ஆயிரத்து 500ல் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் கொல்கத்தாவுக்கு செல்ல 22 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூரு செல்ல 6 ஆயிரம் ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோன்று கொச்சி, திருவனந்தபுரம் மதுரை, கோவைக்கு செல்லவும் 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்