Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகள் தேக்கம்

அக்டோபர் 22, 2022 04:45

போரூர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று 400-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்தரிக்காய், வெண்டைக்காய், நூக்கல், சவ்சவ், வெள்ளரிக்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

நள்ளிரவு வழக்கம் போல விறுவிறுப்பாக காய்கறி விற்பனை தொடங்கியது. பின்னர் அதிகாலையில் சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனை பாதிக்கப்பட்டு ஏராளமான மூட்டைகளில் காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) தக்காளி-ரூ.30, நாசிக் வெங்காயம்-ரூ.32, ஆந்திரா வெங்காயம்-ரூ.12, சின்ன வெங்காயம்-ரூ.100, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.28, ஹாசன் உருளைக்கிழங்கு-ரூ.34, உஜாலா கத்தரிக்காய்-ரூ.20, வரி கத்தரிக்காய்-ரூ.10, அவரைக்காய்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.10, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.18, நூக்கல்-ரூ.10, சவ்சவ்-ரூ.10, வெள்ளரிக்காய்-ரூ.10, முருங்கைக்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.35, முட்டை கோஸ்-ரூ.16, புடலங்காய்-ரூ.15, பீர்க்கங்காய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.20, சுரக்காய்-ரூ.7, காலி பிளவர் ஒன்று-ரூ.20, இஞ்சி-ரூ.65, பச்சை மிளகாய்-ரூ.30.
 

தலைப்புச்செய்திகள்