Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலில் தத்தளித்த 20 வங்கதேச மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை

அக்டோபர் 26, 2022 04:01

சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு உதவிக்காக வெகுநேரம் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியே இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இதில், நடுக்கடலில் சிக்கி தவித்த வங்காளதேச மீனவர்களை இந்திய படை வீரர்கள் கவனித்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மீனவர்களை மீட்டனர். அவர்களை வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்