Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு முழுவதும்  இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள்.. 

அக்டோபர் 28, 2022 04:42

15-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்:

     திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்தியைத் தீவிரமாக திணிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தபோது கடந்த 15-ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது. 

தனி தீர்மானம்:
      மேலும், 16-ம் தேதி பிரதமருக்கு இதுகுறித்து முதலமைச்சர் கடிதம் எழுதியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் தனி தீர்மானம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளது.

பேச்சாளர்கள் பட்டியல்:
     அதை மக்களிடம் விளக்கும் வகையில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், அவற்றில் பேசவுள்ள பேச்சாளர்கள் பட்டியலையும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

தருமபுரியில் முதலமைச்சர் பங்கேற்பு:
    மேலும், தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்