Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நயன்-விக்கி தம்பதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்.. அமைச்சர் ..!

அக்டோபர் 28, 2022 04:44

 தம்பதி மீது எந்த தவறும் இல்லை.. மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன்..! நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக கூறியுள்ளார். 

4 மாதங்களில் இரட்டை குழந்தை:

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் தான் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. 

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:

வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றதாக அறிவித்தாலும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டுமே? அப்படி என்றால் அவர்கள் விதிமுறைகளை மீறி விட்டார்களா? என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தம்பதி மீது வைக்கப்பட்டது. 

பதிவு திருமணம்:

5 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம், சட்டத்தின் படி தங்களது நெருங்கிய உறவினர் மூலம் தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளோம் என அவர்கள் விளக்கமளித்தும் கூட இந்த விவகாரம் முடிந்தபாடில்லை. 

அமைச்சர் விளக்கம்:

இது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் வரை கொண்டு செல்லப்பட்டு, இந்த விவகாரத்தில் நயன்-விக்கி தம்பதி விதிகளை மீறவில்லை என விரிவான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது என கூறப்பட்டு விட்டது. 

மருத்துவமனைக்கு நோட்டீஸ்:

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நயன்-விக்கி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில், முறையான தகவல் அளிக்காததால் குழந்தைகள் பிறந்த மருத்துவ மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

அமைச்சர் காட்டம்:

மருத்துவமனை பெயர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர், நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தொடர்ந்து தம்பதியினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

தலைப்புச்செய்திகள்