Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெடிவிபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம் - காவல்துறை

அக்டோபர் 29, 2022 08:25

சென்னை: கோவை கார் வெடிப்பு குறித்து 18-ம் தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது. உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது

பொதுவான சுற்றறிக்கையே. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரை பற்றி எந்த தகவலும் இல்லை. வழக்கு விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்