Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து

அக்டோபர் 29, 2022 08:27

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவதாக இருந்தது. அங்கு நடைபெறும் குருபூஜை விழாவில் பங்கேற்பதாகவும் இருந்தது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று தங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நாளை காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பசும்பொன் புறப்பட்டு செல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதையும் படியுங்கள்: அனகாபுத்தூர்-பம்மல் பகுதியில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டதால் நேற்று மாலை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் அவரிடம் நீண்ட பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டார். பசும்பொன் செல்லும் பயணத்தையும் ரத்து செய்து உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ள னர். எனவே வரும் 30-ந்தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் 115-வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், முதல்-அமைச்சர் சார்பில் மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்விழாவில் நேரில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்