Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பருவமழையொட்டி காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நவம்பர் 01, 2022 01:48

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.

இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என 15 மண்டலங்களின் 200 வார்டுகளில், மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களத்தில் பணியாற்றி வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், புதிதாக கட்டமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் காரணமாக, பிரதான சாலைகளில் மழைநீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தபோதிலும், சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகம், கே.கே. நகர், ராஜமன்னார் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்பு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்