Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 11, 2019 05:48

பாஜகவின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் அமித் மாளவியா, இதற்காக நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 50 லட்சத்து 14 ஆயிரம் பேர் பின்தொடரும் நிலையில், இந்த போட்டியில் பாஜக முன்னணியில் உள்ளது. 

இதேபோல் அதிக நபர்களால் பின் தொடரப்படும் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரை 4 கோடியே 72 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர். இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, 10 கோடியே 60 லட்சம் பேரால் பின்தொடரப்படுகிறார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்