Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக மக்கள் கட்சி சார்பில் தொடர் 100 நாள் உண்ணாவிரத போராட்டம்

நவம்பர் 03, 2022 04:45

சென்னை: தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு இடம் கொடுத்த மக்களுக்கு விரிவாக்கப்பணி நடைபெறாததால் அந்த இடத்தை திருப்பி வழங்க வேண்டி ஜனவரி 01ம் தேதி முதல் குமாரரெட்டியாபு ரம் கிராமத்தில் தொடர் 100 நாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. 

இது குறித்து தமிழக மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் ªêŒFò£÷˜èOì‹ கூறுகையில்;- தூத்துக்குடி ஸ்டெர்லைட்
ஆலை விரிவாக்கப்பணிக்காக 2008-ம் ஆண்டு சுமார் 316 ஏக்கர் இடம் நிர்பந்தனையுடன் கையகப்படுத்தப்பட்டது. அப்போது
மதிப்பீடுத்தொகையாக ரூ.80 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதற்கு பின்பு அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவ ராக இருந்த திரு.பிரகாஸ் (IAS) அவர்கள்,ரூ.65,000/-ஆகவும், பின்பு ரூ.10,00,000/- வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருக்கி றார்கள் அன்றைய தினம் பத்திரப்பதிவு 2008ல் சுமார் ரூ.11,00,000/- மாக பத்திரவுத்துறையின் மூலம் பத்திரப்பதிவும் நடைபெற்றிருக்கிறது. 

தற்போது சந்தை மதிப்பு ரூ.20,00,000/- மாக உள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி சிப்காட் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை
விரிவாக்கத்திற்காக கொடுத்த 316 ஏக்கர் நிலத்தையும், 2018ம் ஆண்டு மே 30ம் தேதி அரசு இரத்து செய்திருக்கிறது இது
வரவேற்கத்தக்கதாகும். 

2022ம் ஆண்டு ஜுன் மாதம் அரியலூர் மாவட்டத்தில் அரசு 1996-ல் கையகப்படுத்திய சுமார் 9 ஆயிரம் ஏக்கர் இடத்தில் அந்த பணி நடைபெறாததால் (திட்டம்) அந்த நிலத்தில் இப்போது 8374 ஏக்கர் இடம் 13 கிராம மக்களுக்கு திருப்பி தமிழக அரசு கொடுத்திருக்கிறது. இது மிகவும் வர வேற்க்க தகுந்த மகிழ்ச்சிக்குரியது. 

இதேபோல் எங்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக எடுத்த இடத்தை திருப்பி வழங்க வேண்டும் (அல்லது) சந்தை மதிப்புப்படி ரூ.20,00,000/- லட்சம் வழங்க வேண்டும். நாங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டு காலமாக போராடி வருகிறோம் உடனடியாக அரசு வழங்க வில்லை என்றால் வருகின்ற ஜனவரி 01ம் தேதி முதல் தொடர் 100நாள் உண்ணாவிரதம் போரட்டம் நடத்த
இருக்கிறோம் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்