Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இல.கணேசன் அவர்களின் 80-வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

நவம்பர் 03, 2022 05:18

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். 

பிறந்தநாள் காணும் இல.கோபாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். இதேபோல், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்