Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரவும் மெட்ராஸ்-ஐ சிறப்பு வார்டு ஏற்பாடு

நவம்பர் 05, 2022 02:46

சென்னை: சென்னையில் பருவ கால மாற்றத்தால் 'மெட்ராஸ்-ஐ' என்ற கண் வலி வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஏராள மானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். இதையடுத்து எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்படுகிறது. திங்கள் கிழமை முதல் இந்த வார்டு செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்ணில் அரிப்பு ஏற்படும். கண்ணில் இருந்து வெளியேறும் ஒரு வகை திரவத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரவும். ஆரம்பத்தில் நாள்தோறும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இப்போது அது மேலும் அதிகரித்துள்ளது. கண் நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் வைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு கண் வலி ஏற்பட்டால் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கண் நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த வழி. வெளியே செல்லும்போது
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மூக்கு கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்