Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவ 11 வரை தொடரும் கனமழை

நவம்பர் 07, 2022 01:11

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் லேசான வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்ன மாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9-ந் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக் கிறது.வருகிற 10-ந் தேதியைபொறுத்தவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்  கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் கேரளாவில் இடியுடன் கூடிய மிதமான மழையும், அதன் பிறகு இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையானது நவம்பர் 11 ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வாய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்