Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய-பூடான் எல்லையில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளனது

நவம்பர் 07, 2022 03:04

கவுகாத்தி: அசாமின் தமுல்பூர் நகரில் இந்தியா மற்றும் பூடான் நாடுகள் இடையேயான எல்லை அமைந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த வாகனம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. 

இதில் வாகனத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயம டைந்து, உயிரிழந்து உள்ளார். இதுதவிர, 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ராணுவ தள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 

தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கவுகாத்தி நகர பாதுகாப்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

தலைப்புச்செய்திகள்