Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

நவம்பர் 07, 2022 03:13

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெற வுள்ளது.இதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 

11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்