Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நவம்பர் 08, 2022 11:29

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடனா, ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழியும் நிலையில் மற்ற அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 

நேற்று கருப்பாநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. அங்கு 31 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. குண்டாறு அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பெய்து. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. 

தொடர்ந்து பெய்துவரும் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்