Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 08, 2022 12:19

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது 2 விசைப்  படகுகளில் சென்று மீன்பிடித்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை யினர் கைது செய்தனர். ஏற்கனவே 6 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசு வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தபோராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவர் சங்கங்கள் அறிவித்திருந்தன. 

அதன்படி இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை யும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடம் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் களையும், கடந்த 5-ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உள்பட 15 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 21 மீனவர்களையும் விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறை பிடித்து வைத்துள்ள 29 படகுகளையும் விடுவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக மீனவர்கள் கூறும்போது, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மேலும் பல போராட்டங்கள் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்