Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் குறைந்த காற்று மாசுபாடு

நவம்பர் 09, 2022 12:00

புதுடெல்லி: டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த வியாழக்கிமை முதல் காற்றின் தரக்குறியீடு 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக் கிழமை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று
தெரிவித்தார். 

அதேபோல் காற்று மாசுவை குறைக்க 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலை யில், கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட் டதன் விளைவாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள்
திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி யுள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்களுகளும் மீண்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசிற்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும், டெல்லியில் தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்