Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் ஆற்றில் கார் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு

நவம்பர் 09, 2022 12:30

தோடா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் உள்ள பிரேம் நகர் என்ற இடத்தில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த கார் நிலை தடுமாறி அங்குள்ள ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடியதால் கார் அதில் மூழ்கியது. இதனால் காரில் பயணம் செய்த 4 இளைஞர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்ளவில்லை. இன்று காலை முதல் 4 பேரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்